இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை கலக்க வரும் Realme Gt 5 Pro: சிறப்பம்சங்கள், விலை விவரங்கள்

55

இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு வெளியாக உள்ள ரியல்மீ ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்து பார்ப்போம்.

Realme Gt 5 Pro
இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தையில் நாளுக்கு நாள் போட்டி அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஒவ்வொரு ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களின் தனித்தன்மை மற்றும் கூடுதல் வசதிகளை மையப்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.

அந்த வகையில் Realme நிறுவனம் தங்களுடைய Realme Gt 5 Pro ஸ்மார்ட்போனை 2024 ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட உள்ளது.

சிறப்பம்சங்கள்
8ஜிபி ரேம், 256 ஜிபி உள்ளீட்டு மெமரி, Qualcomm Snapdragon 8 Gen3 மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஆகிய செயல்திறனுடன் Realme Gt 5 Pro வெளிவர உள்ளது.

பின்புற கேமராவில் 200 MP + 13 MP + 2 MP என டிரிபிள் கேமரா வசதி கொடுக்கப்பட்டுள்ளது. முன்புற கேமரா 32MP வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

4700 mAh பேட்டரி செயல்திறனுடன் வேகமான யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

6.74 in அளவுடன் 451 PPI , AMOLED திரை Realme Gt 5 Pro ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு புதிய அம்சத்துடன் வெளிவர இருக்கும் Realme Gt 5 Pro ஸ்மார்ட்போனின் விலை ரூ. 59,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SHARE