இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: சாய்னா வெளியேற்றம்

448
இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினார்.

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாய்னா, காலிறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர்-1 வீராங்கனையான லி சுவேருயியை (சீனா) எதிர்கொண்டார். 44 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் கடுமையாகப் போராடிய சாய்னா, 20-22, 15-21 என்ற நேர் செட்கணக்கில் தோல்வியடைந்தார்.

இந்தியாவின் பி.வி.சிந்து, காஷ்யப், ஸ்ரீகாந்த் ஆகியோர் ஏற்கனவே தோல்வியடைந்து வெளியேறினர். தற்போது சாய்னாவும் வெளியேறியதால் இத்தொடரில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

சாய்னாவை வென்ற லி சுவேருயி அரையிறுதியில் தாய்லாந்து விராங்கனை ஜிண்டாபானுடன் விளையாட உள்ளார்.

SHARE