இந்தோனேஷியாவில் தாயார் ஒருவர் வாளி நீருக்குள் குழந்தையை மூழ்கடிக்கும் வீடியோ காட்சி பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

314

இந்தோனேஷியாவில் தாயார் ஒருவர் வாளி நீருக்குள் குழந்தையை மூழ்கடிக்கும் வீடியோ காட்சி பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

bucketwater_baby_002

பேஸ்புக்கில் வெளியான அந்த வீடியோவில், குழந்தையை அதன் தாயார், ஒரு வாளி நீருக்குள் போட்டு தோய்த்து எடுக்கிறார்.

அக்குழந்தை கத்தி அழுகிறது, ஆனால் அதனை பொருட்படுத்தாமல், அதன் இளம்பிஞ்சு காலைப்பிடித்து தலைகீழாக தூக்குகிறார், பின்னர் அதன் தாடையை பிடித்தபடி முன்னும் பின்னும் ஆட்டுகிறார்.

சுமார் 2 நிமிடங்கள் ஓடும் வீடியோ சமூகதள பயன்பாட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆபாசமான காட்சிகளை பேஸ்புக் தளத்தில் இருந்து நீக்கும் அந்நிறுவனம், மக்கள் பயப்படும்படியாக இருக்கும் இதுபோன்ற வீடியோவை பதிவேற்றும் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.

எனவே இந்த வீடியோவை நீக்க வேண்டும் என்று சமூகதள பயன்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதற்கு விளக்கம் கூறியுள்ள பேஸ்புக் நிர்வாகம், இது ‘பேபி யோகா’ எனப்படும் குழந்தைகளுக்கான நீர் யோகாசன பயிற்சியாகும். அந்த பயிற்சியை ஒருதாய் தன்னுடைய குழந்தைக்கு அளிக்கும் காட்சிதான் வீடியோவாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.

SHARE