இந்த செல்ஃபி மட்டும் அப்படி என்ன ஸ்பெஷல்? சொல்கிறார் ஹன்சிகா

308

தென்னிந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் தற்போது இளைய தளபதிக்கு ஜோடியாக புலி படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிந்தது. ஹன்சிகா இப்படத்திற்காக மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ளாராம். இப்படத்தில் இளவரசியாக வரும் ஹன்சிகா, சண்டைக்காட்சிகளில் கூட நடித்துள்ளதாக கூறப்படுகின்றது.

’புலி படம் தனக்கு மிகவும் மனதிற்கு நெருங்கிய படம், இப்படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பு இன்று, இதில் பணியாற்றியதில் மனதிற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது’ என விஜய்யுடன் நிற்கும் ஒரு செல்ஃபியை தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

SHARE