திரையுலகில் உள்ள நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என கேட்டு ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருவார்கள். அந்த வகையில் தற்போது இந்திய சினிமாவையே தனது நடிப்பாலும், நடனத்தாலும் அதிர வைத்த நடிகர் ஒருவரின் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது.
அட இவரா
அவர் வேறு யாருமில்லை பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் தான். ஆம், இந்திய சினிமாவில் டாப் நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் தான் இது.
அவர் குழந்தை நட்சத்திரமாக இருந்த போது, ரஜினியுடன் பகவான் தாதா எனும் படத்தில் நடித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது.