இந்த Smartphone-ஐ ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒருவாரம் யூஸ் செய்யலாம்! விலை என்ன தெரியுமா?

75

 

ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவர்கள் அதிகம் சந்திக்கும் பிரச்சனை சார்ஜிங் போடுவது தான். அந்த பிரச்சனைக்கு தீர்வு காண Oukitel WP19 என்கிற பெயர் கொண்ட ஸ்மார்போனை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 21,000 mAh பேட்டரி பேக் அப் உடன் வருகிறது. இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒரு வாரம் வரை பயன்படுத்திக் கொள்ளலாமாம். தொடர்ந்து பயன்படுத்தினால் 4 நாட்கள் வரை பேட்டரி தாங்கும் என கூறப்படுகிறது.

Oukitel WP19 ஸ்மார்ட்போன் 33W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது. அதுமட்டுமின்றி 6.78-இன்ச் FHD+ டிஸ்ப்ளே மற்றும் 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் டெம்பர்ட் கிளாஸ் பாதுகாப்புடன் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமென்சிட்டி G95 SoC புராசசர் உள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் அம்சமும் இதில் உள்ளது.

27ஆம் திகதி முதல் உலக சந்தையில் விற்பனைக்கு வரும் இந்த போனின் விலை $269.99 தான்! இதனை AliExpress தளத்தின் வாயிலாக வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE