துறு துறு கதாபாத்திரத்தில் நடித்து நம் எல்லோர் மனதையும் கவர்ந்தவர் ஜெனிலியா. சில நடிகைகள் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே திருமணம் செய்து செட்டில் ஆகிவிடுவார்கள்.
அதேபோல் திரையுலகில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று கலக்கி கொண்டிருந்த ஜெனிலியா, பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
தற்போது ஜெனிலியா கர்ப்பமடைந்திருப்பதாக அவரது கணவரான ரித்தேஷ் தேஷ்முக்கே தெரிவித்துள்ளார். இதனால் இவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.