இன்டர் போல் வலைவிரித்துள்ள வெள்ளை வேன் தாதா ஒட்டுக்குழுவின் தலைவரின் கைகூலி ஷரண் சுவிஸில் தஞ்சம்,

360

இன்டர் போல் வலைவிரித்துள்ள வெள்ளை வேன் தாதா ஒட்டுக்குழுவின் தலைவரின் கைகூலி ஷரண் சுவிஸில் தஞ்சம்,

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க உத்தியோகஸ்தர்கள் போன்றோரை கொலை செய்த ஒட்டுக் குழுவின் தலைவர் பிள்ளையானின் கைக்கூலியான ஷரண் சுவிஸ் நாட்டில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொழும்பு மாநகரில் சர்வதேச பண்டாரநாயக்க ஞாபகாத்த மண்டபத்தில் வைத்து கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் ரவீந்திரநாத், கொழும்பு புறக்கோட்டையில் புகையிரத நிலையத்தில் வைத்து கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இரத்தினபுரி பகுதியில் வீதியோரமாக வீசப்பட்ட இரு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க உத்தியோகஸ்தர்களின் சடலங்கள் மீட்க்கப்பட்டன.

இக்கொலைகள் தொடர்பாக காவல்துறையின் விசாரணை முடுக்கிவிடப்பட்ட நிலையில் ஒட்டுக்குழுவின் தலைவரின் கைகூலியாக செயற்பட்டுவந்த ஷரண் சுவிஸ் நாட்டின் அரவ் என்ற நகரத்தில் வசித்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான விசாரணை சர்வதேச காவல்துறையினரிடம்

(இன்டப் போல்) ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

மட்டக்களப்பு கருவப்பங்கேணியைச் சேர்ந்த வெள்ளைவான் கொலையாளி கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதியில் இடம்பெற்ற கடத்தல்கள், மற்றும் கொலைகளுடன் சம்பந்தப்பட்டவன் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ஒரிரு ஆண்டு காலமாக குருணாகல் மாவட்டத்தில் மறைவிடமாக வசித்துவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது ஒரு இணையசச் செய்திRosan

SHARE