வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்று இந்தியாவுக்குப் பயணம் செய்யவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சென்னையில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காகவே விக்னேஸ்வரன் இந்தியா செல்லவுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் முதலமைச்சரின் இந்தியப் பயணத்தில் இணைந்து கொள்ளவுள்ளனர். முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் விக்னேஸ்வரன் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.எனினும்,இந்தியப் பிரதமர் மோடியுடன் விக்னேஸ்வரன் சந்திப்பு நடத்துவாரா என்பது பற்றிய உத்தியோகபூர்வ தகவல்களை எதனையும் இந்திய அதிகாரிகள் வெளியிடவில்லை.