இன்ஸ்டாகிராம் உபயோகப்படுத்துவீங்களா? அப்போ இந்த முக்கிய செய்தி உங்களுக்கு தான்

23

 

இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பயனாளர்களிடம் அந்நிறுவனம் ஒரு முக்கிய விடயத்தை செய்ய வலியுறுத்தி வருகிறது.

அதன்படி செயலியை பயன்படுத்தும் முன் பிறந்த திகதி விவரங்களை பதிவிடக் கோரி இன்ஸ்டாகிராம் தனது பயனர்களை வலியுறுத்துகிறது.

முன்னதாக வயது உறுதிப்படுத்துவதை கட்டாயமாக்கப்போவதாக இன்ஸ்டாகிராம் அறிவித்து இருந்தது. அந்த வகையில் அறிவிப்பு வெளியான எட்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது இதனை செயல்படுத்த துவங்கி உள்ளது.

இதையும் படிங்க: Whatsappல் Chats மற்றும் Status இனி ஒன்றாக போகுது! கலக்கலான புதிய அப்டேட்

இந்த நடவடிக்கையின் மூலம் 13 வயதுக்கும் குறைவானவர்கள் செயலியை பயன்படுத்த விடாமல் செய்ய இன்ஸ்டாகிராம் முடிவு செய்துள்ளது.

பிறந்த திகதி விவரங்களை கொண்டு ஒவ்வொரு வயதினருக்கு ஏற்ற விளம்பரங்களை வழங்கவும் இன்ஸ்டாகிராம் திட்டமிட்டிருக்கலாம்.

புதிய திட்டத்தை செயல்படுத்த இன்ஸ்டாகிராம் தரவுகளை பார்க்க முயற்சிக்கும் போது இடையில் பிறந்த திகதி விவரங்களை பதிவிட வலியுறுத்திகிறது.

மேலும் இந்த ஆப்ஷனை நிராகரித்து விட்டு செயலியை பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படவில்லை.

SHARE