இன ஒற்றுமையை மேடைகளில் பேசாது செயற்ப்பாட்டில் காட்டவேண்டும் – வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர்…
இன்றைய தினம் 03-11-2014 திங்கள் மதியம் வவுனியா மாவட்ட, வெங்கலச் செட்டிக்குளம் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட முகத்தாங்குளம், மருதமடு ஆகிய குளங்களில் சுமார் 90000 நன்னீர் மீன்குஞ்சுகள் வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் விடப்பட்டன.
சிங்களவர்கள் வாழும் கிராமமான மருதமடு குளத்தில் மீன்குஞ்சுகளை விட்டபின்னர், அக்கிராம பெளத்த விகாராதிபதியையும், நன்னீர் மீன்பிடியாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் மக்களையும் சந்தித்து உரையாற்றும் போது அமைச்சர் மேற்கொண்டவாறு தெரிவித்தார்,
மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் வடக்கு மாகாணத்தில் உள்ள குளங்களில் மீன்குஞ்சுகள் விடப்படுகின்றன, இவ் விடயத்தில் இன மத வேறுபாடின்றியும் பிரதேச வாதம் இன்றியும் வடக்கு மக்களுக்கு சமமாக பகிரப்படும் என்றும், வடக்கு பகுதியில் அரசாங்கத்தினராலும், ஆக்கிரமிப்பாளர்களினாலும் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. இனி வரும் காலங்களில் இக் காணி அபகரிப்பை தடுத்து நிறுத்த தாங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
TPN NEWS