இயற்கையால் நிகழ்த்தப்படும் அதிசயம் எப்போது நடக்கும் என யாருக்குமே தெரியாது.

702

இயற்கையால் நிகழ்த்தப்படும் அதிசயம் எப்போது நடக்கும் என யாருக்குமே தெரியாது. அந்த வகையில் ஓமன் நாட்டில் அரங்கேறியுள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சர்யப்படுதியுள்ளது.

ஓமன் நாட்டில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் காலாவதியான முட்டைகள் சுகாதார துறையால் கண்டுபிடிக்கப்பட்டு, குப்பையில் கொட்டப்பட்டது. அப்போது தான் நம்ப முடியாத அதிசயம் அரங்கேறி உள்ளது.

சுகாதார துறையினர் காலாவதியான முட்டைகளை அருகே இருந்த குப்பை குப்பை மேட்டில் கொட்டியுள்ளனர். ஆனால் ஓமன் நாட்டில் நிலவி வரும் கடுமையான வெப்ப நிலை காரணமாக காலாவதியால் முட்டைகளில் இருந்து கோழி குஞ்சுகள் குவியல் குவியலாக வெளியே வந்துள்ளது.

மேலும் இந்த காட்சிகள் சமூக வலைதளத்திலும் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதனை பலரும் இயற்கையின் அதிசயமாகவே பார்க்கிறார்கள்.

SHARE