
இரட்டைக் குடியுரிமை உடைய எவரும் தேர்தல்களில் போட்டியிட போட்டியிட அனுமதியளிக்கப்பட மாட்டாது அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான சட்டங்கள் எதிர்வரும் காலங்களில் நிறைவேற்றபப்ட உள்ளது.
இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றியீட்டி தங்களுக்கு விருப்பமான வகையில் நடந்து கொள்கின்றனர் என ஆளும் கட்சியின் முக்கிய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் நாட்டை விட்டு வெளியேறிச் சென்று விடுகின்றனர். இதனால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பெரும் பாதிப்புக்கள் ஏற்படுகின்றது.
ஒருவர் இலங்கையில் தேர்தல்களில் போட்டியிட வேண்டுமாயின் அவர் ஏனைய நாட்டில் வகித்து வரும் இரட்டைக் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்.
விரைவில் இது குறித்த சட்டங்கள் அமுல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆளும் கட்சியின் பல முக்கியஸ்தர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.