இரட்டைக்கோபுரம், தாஜ் ஹோட்டல் இரு தாக்குதல்களுமே பிரபாகரனின் போராட்டத்தை மழுங்கடிக்க காரணமாயிருந்தன

628

உலக வர்த்தக மையமாக கருதப்பட்டுவந்த அமெரிக்காவின் அதி யுயர் இரட்டைக்கோபுரம் அல்கைதா அமைப்பினால் விமானத்தின் மூலம் தாக்கப்பட்டது. இதற்கு அல்கைதா இயக்கம் உரிமைகோரியது. பூமிக்கு கீழ் 05 மாடிகளையும், பூமிக்கு மேல் 104 மாடி களை உள்ளடக்கிய வண்ணம் 1776 அடி உயரம் கொண்ட இக்கட்டடம் பூமியின் வடகோளத்தில் அமைந்துள்ள அதி யுயர் கட்டடமாகவும், உலகளாவிய ரீதியில் 04 வது கட்டடமாகவும் தற்பொழுது கருதப்பட்டுவருகின்றது.

1993 உலக வர்த்தகமையம் தாக்குதலுக்கு இலக்கானது. அக்காலகட்டத்தில் 650 வெடி பொருள் மருந்துகள் அடித்தளத்தில் வைக்கப்பட்டிருந்தது. பெரும் சேதம் விளைவித்ததோடு, அக்கட்டடத்தில் இருந்த 5000 பேரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இத்தாக்குதலின் சூத்;திரதாரியாக ராம்சி யூசுப் பெப்ரவரி 1995 இல் பாகிஸ்தானில் வைத்து கைதுசெய்யப்பட்டார். இக்கட்டடமானது உலக சாதனைக் கட்டடமாகவும் காணப்பட்டது. இத்தாக்குதலை அல்கைதா தலைமையில் 19 பேர் தாக்குதலை தொடுத்தனர். 3000 இற்கும் மேற்பட்டோர் பலியா னதுடன் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்திருந்தனர். இதன்போது அமெரிக்காவால் பட்டியலிடப்பட்டு தீவிர வாதிகள் என்று கருதப்பட்டுவந்த 58 நாடுகளைக் கொண்ட தீவிரவாத தலைவர்களை அழித்தொழிக்கும் நடவடிக்கையில், தீவிரம் காட்டப்பட்டது. அதிலும் குறிப்பாக கடல், வான், தரை, விசேடமான தற்கொலைப்படைகளைக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளும் உள்ளடக்கப்பட்டனர்.

download

சர்வதேசத்திற்கு சவால் விடும் அளவிற்கு விடுதலைப்புலிகளின் நகர்வுகள் காணப்பட்டது. விடுதலைப்புலிகளினுடைய போராட் டத்தை அமெரிக்கரசு மறை முகமாக அங்கீகரித்தாலும் கூட, பிரபாகர னின் தலைமைத்துவத்தை அமெரிக்க ரசு விரும்பவில்லை. ஆனால் இன்று விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு அமைப்பாளராக, நாடுகடந்த தமி ழீழ அரசின் தலைவராக விளங்கும் சட்டத்தரணி உருத்திரகுமாரன் அவர்கள் அமெரிக்காவிலேயே செயற்பட்டுவருகின்றார். இவரின் காரியாலயமும் அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலேயே அமைந்துள்ளது. பல தடவைகள் அமெரிக்கரசு விடுதலைப்புலிகளை ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையுமா றும், அதற்கான தீர்வுத்திட்டங்களை தாம் வகுத்துத்தருகின்றோம் எனவும் கோரியிருந்தது மட்டுமல்லாது இறுதி நேரப் யுத்தத்தின் போதும்(2009) பிரபா கரனை சரணைடையுமாறு அப்போதைய அமெரிக்க இராஜாங்க செயலாளர் கிளாரி கிளிண்டன் மூலம் கேட்டபோதும் பிரபாகரன் மறுத்துவிட்டார். இதுவே அமெரிக்காவால் விடுதலைப்புலிகளுக்கு வழங்கப்பட்ட இறுதி சந்தர்ப்பம் ஆகும்.

அல்கைதா அமைப்புடன் விடுதலைப்புலிகளுக்கு நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றது என்பதை அமெரிக்கரசு விளங்கிக்கொண்டதோ என்னவோ, பிரபாகரனின் போராட்டத்தை முற்றுகைக்குக் கொண்டுவர அமெரிக்கரசு போதிய உதவி ஒத்தாசைகளை இலங்கையரசிற்கு வழங்கியிருந்தது. 250 கடல் மைல் தொலைவில் அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் இறுதிநேர யுத்தத்தின் போது கடலைக் கன்காணித்துக் கொண்டிருந்தன. இதன்போது விடுதலைப்புலிகளுக்கு ஆயுதமேந்தி வந்த 08 கப்பல்கள் அமெரிக்காவினால் காட்டிக்கொடுக்கப்பட்டது. அமெரிக் கரசு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர காரணமாகவிருந்தது என இலங்கையின் பாதுகாப்புச்செயலர் கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்திருந்தமையை நினைவுபடுத்த வேண்டும்.

ஆனால் இன்று தன்னுடைய தேவை களை பூர்த்தி செய்துகொள்வதற்காக, இலங்கையரசின் மீது போர்க்குற்றவிசாரணைகளை முடக்கி விட்டுள்ளது. நேரடியாக தனது தலையீடு இல்லாது இருந்துவந்த அமெரிக்கரசு நேரடியாக களமிறங்கியிருப்பது வேடிக்கைக்குரியவிடயமாகும். உண் மையில் தமிழ்மக்களின் நலனில் அக்கறைகொண்டிருக்குமேயானால் 2009ம் ஆண்டே விடுதலைப்புலிகளின் போராட்டத்தை சமாதான வழிக்கு அல்லது தனது அதிகாரத்தினை பயன்படுத்தி மாற்றுவழிகளை கையாண்டிருக்கவேண்டும்.

அவ்வாறு செயற்படாது இன்று தமிழ் மக்களையும், போராளி களையும் முள்ளிவாய்க்காலில் காவுகொடுத்துவிட்டு தமிழ்மக்களுக்கான சுதந்திரத்தினை பெற்றுக்கொடுக்கும் ஒரு செயற்திட்டத்தினை ஜெனிவாவினூடாக காய்நகர்த்துவது என்பது, எல்லாம் முடிந்த பின் பாசாங்குகாட்டும் செயலா கவே அமெரிக்கரசின் செயற்பாடுகள் அமையப்பெறுகிறது. சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான், மியன்மார் போன்ற பல நாடுகளுடனான பிளவுகளுக்கும், அந்நாட்டின் கிளர்ச்சிகளுக்கும் பக்கபலமாக இருந்து செயற்பட்டது அமெரிக்கரசே என்று கூறலாம்.அதுபோன்றதாகவே இரட்டைவேடம் பூண்டு தற்பொழுதும் செயற்பட்டு வருகின்றது. இரட்டைக்கோபுரத் தாக்குதல் என்பது அமெரிக்காவால் ஈடுசெய்யமுடியாததொன்றாகும். தொடர் ச்சியான தாக்குதல்கள் தன் மீது வராமல் இருப்பதற்கு, தீவிரவாத அமைப்புக்களை மழுங்கடிப்பதன் மூலம் வெற்றி காண லாம் என்ற முடிவுக்கு அமெரிக்கரசு வந்தது. இதற்கான சந்தர்ப்ப சூழ்நிலையை எதிர்பார்த்தவண்ணமே இருந்தது.

அடுத்து பார்க்கின்றபொழுது மும்மை தாஜ்ஹோட்டல் தாக்குதலாகும். இதில் 125 பேர் பலியா னதுடன் 327 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்தியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக நகரமான மும்பையில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்லாமிய தீவிரவாதிகளால் 04 தற்கொலையாளிகள் பயன்படுத்தப்பட்டனர். தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த தீவிர வாதிகள் நூற்றுக்கணக்கானோரை பணயக்கைதிகளாக தடுத்து வைத்திருந்ததுடன், இதில் 06 வெளிநாட்டுப் பயணிகளும் கொல்லப்பட்டனர். அதே நேரம் இந்தியாவின் 10 இடங்களில் தாக்குதல்கள் நடத்த தயாராகவிருந்ததாக கூறப்பட்டது.
இத்தாக்குதலின் பொழுது அல்கைதா தீவிரவாதியான முஹம்மட் அஜ்மல் கசாப் என்பவர் உயிருடன் பிடிபட்டார். இவருக்கு 2010 ம் ஆண்டு மும்மை நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இக்ஹோட்டலானது 1903ம் ஆண்டு நவம்பர் 16ம் திகதி திறந்துவைக்கப்பட்டது. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஹோட்டல் ஆகும். ஆங்கிலேயர் காலத்திலேயே இது கட்டப்பட்டது. உலக மகாயுத்தத்தின் பொழுதும் இக்ஹோட்டலில் 600 படுக்கைகள் கொண்ட மருத்துவ மனை இருந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறான மும்பை கூட்டுத்தாக்குதல் இடம்பெற்றதன் காரணமாகவும், ராஜீவ் காந்தி விடுதலைப்புலிகளினால் கொலை செய்யப்பட்டதன் காரணமாகவும் கூட்டிக்கழித்துப்பார்த்த இந்தியரசு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா கரனையும், அதன் சகாக்களையும் ஒழித்துக்கட்ட இலங்கையரசுடன் இரகசியமான முறையில் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது.

1987ம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ராஜீவ்காந்தியின் மீது, இலங்கை இராணுவம் துப்பாக்கி பிடி யினால் அடித்தது அவமானமாகத் தெரியவில்லை. இலங்கை அப்பாவித் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொன்றுகுவித்தபொழுது, கவச வாகனத்தினால் கோண்டாவிலில் வைத்து இந்திய இராணுவம் நெறித்துக்கொலை செய்தபொழுது இக்கதையினைக் கேட்க மனிதஉரிமைகள் குழுக்கள் கூட இலங்கை வரவில்லை. இந்தியாவின் குறுக்காஸ் சீக்கியப்படைகளினால் தமிழ்பெண்கள் மானபங்கப்படுத்தப் பட்டார்கள். பலர் சிறைப்பிடித்து சித்திரவதைசெய்யப்பட்டனர். அமைதி காக்கும் படை என இலங்கைக்குள் நுழைந்த இந்தியரசு தனது வெறித்தனத்தை அப்பாவி தமிழர்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும் காட்டத்தொடங்கியது. இதன் காரண மாக விடுதலைப்புலிகள் மீண்டும் இந்திய இராணுவத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்திய இராணுவத்தை இலங்கையில் இருந்து வெளியேற்றுவது தொடர்பில், இலங்கையரசு உடன்பாடாகவே இருந்தது. அக்காலகட்டத்தில் பிரேமதாஸ அவர்கள் ஆட்சியிலிருந்தார். விடுதலைப்புலிகளுக்கு வாகனங்கள், ஆயுதங்களை வழங்கினார். தமிழர்களுக்கும் இந்தியாவிற்கும் நிரந்தர பகைமையை ஏற்படுத்தினால் அதன் மூலம் வெற்றி காணமுடியும் என்ற நிலைக்கும் இலங்கையரசு வந்தது.

ரணசிங்க பிரேமதாஸ அவர்களினால் விடுதலைப்புலிகளுக்கு தேவைப்பட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டது. இந்திய இராணுவத்தை இம்மண்ணில் இருந்து வெளியேற்றுங்கள். வடகிழக்கில் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வழிவகுப்போம் என அன்;ரன் பாலசிங்கத்தினூடாக வலியுறுத் தியிருந்தார். ஆயுதப் போராட்டத்தினால் இந்திய இராணுவத்துடன் வெற்றிகாணமுடியாத விடுதலைப்புலிகள், தியாகி திலிபன், அன்னை பூபதி போன்றோரின் மூலம் அஹிம்சை வழி யில் போராட்டங்களை முன்னெடுக்க செயற்பட்டனர்.
திலீபன் அவர்கள் நல்லூரின் வீதி யில் 12 நாட்கள் நீரருந்தாது உண்ணாநோன்பிருந்து, இந்திய இராணுவத்தினை வெளியேற்றுவதற்கான கோரிக்கைகளை முன்வைத்து தனதுயிரை காந்தியின் வழியில் தமிழினத்திற்காக தாரைவார்த்தார். இவர் ஒரு பல்கலைக்கழக மருத்துவமாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கவிடயமாகும். இவ்வாறிருக்கும் காலகட்டத்தில்தான் துரதிஷ்டவசமான சம்பவம் நிகழ்கின்றது. அதுதான் விடுதலைப்புலிகளினாலும், ரணசிங்க பிரேமதாஸவினாலும் திட்டமிடப்பட்டு செய்யப்பட்டதே ராஜீவ்காந்தியின் கொலை.அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஒரு கட்டத்தில் குறிப்பிட்டிருந்தார் இது ஒரு துரதிஷ்டவசமான சம்பவம் என்று. இவ்வாறு ராஜீவ்காந்தி கொலை யின் பின்னர் இந்திய அரசிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் விரி சல் ஏற்பட்டது.

பிரேமதாஸ சொன்னதைச் செய்த புலிகள், பிரேமதாஸ அதற்குரிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததன் காரணமாக, ரணசிங்க பிரேமதாஸ அவர்களும் கொழும்பில் கிரான்பாஸ் சந்தியில் வைத்து தொழிலாளர் தின மான அன்று விடுதலைப்புலிகளின் தற்கொலைத்தாக்குதலின் மூலம் கொலைசெய்யப்பட்டார்.

ரணசிங்க பிரேமதாஸ அவர்கள் அக்காலகட்டத்திலிருந்து ஆட்சியிலிருப் பாராகவிருந்தால், சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அரசு ஆட்சிக்கு வராதநிலை தோன்றியிருக்கும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் தொடர்ச்சியாக சந்திரிக்க அரசி னால் போராட்டத்தை முன்கொண்டு செல்லமுடியாமல் போனது. சந்திரிக்காவின் ஆட்சியின் காலத்தில் இந்தியாவுடனான நட்புறவு பெரிதளவில் காணப்படவில்லை. இருந்தும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் பின்னர், மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் அரசு விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு உறுதுணையாக இருந்து செயற்பட்டது. இலங்கையில்; பயங்கரவாதம் என்றவொன்று இருப்பதால், நாளை இந்தியாவிலும் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் ஆரம்பிக்கும் என்கின்ற காரணத்தினால் விடுதலைப்புலிகளின் போராட்டத்தை ஏனைய இயக்கங்களின் வலிமையையும் உடைத்தது போன்று, விடுதலைப்புலிகளையும் சுக்கு நூறாக்கி கருணா, பிரபாகரனுட னான பிளவுகளையும் ஏற்படுத்தி அதனூடாக வெற்றி காணலாம் என்ற நோக்கில் இந்தியரசு செயற்பட்டுவந்தது.

தமிழ்மக்களின் இனச்சுத்திகரிப்பிற்கு இந்தியரசும் தனது ராடர் கருவிகளை யும், ஆயுதங்களையும் வழங்கி, விடுதலைப்புலிகளுடைய போராட்டத்தை இலங்கையரசுடன் இணைந்து சின்னாபின்னமாக்கியது. அதன் காரண மாகவே நடந்துமுடிந்த இந்தியத் தேர்தலிலும் கூட காங்கிரஸ் அரசு படுதோல்வியடைந்தது. இந்த இரண்டு காரணங்களுமே விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டத்திற்கும், அவர்களின் கனவிற்கும் குந்தகம் விளைவித்த காரணங்களாக அமைந்தன எனலாம்.

–      மறவன் –

 

 

 

SHARE