மட்டக்களப்பு – வந்தாறுமூலை பகுதியில் புட்டிப்பால் புரைக்கேறியதில் ஆறு மாத ஆண் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், இரட்டையர்களில் ஒரு குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
வயிற்றோட்டத்தினால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தைக்கு தாயார் புட்டிப்பால் ஊட்டி உறங்கச் செய்துள்ளார். எனினும் சற்றுநேரத்தில் குழந்தை மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இதேவேளை, புட்டிப்பால் புரைக்கேறியதாலேயே குழந்தை உயிரிழந்துள்ளதாக செங்கலடிப் பிரதேச வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.