இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் அஜித்-கௌதம்மேனன் படம்!

525

இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க இன்னொரு கதாநாயகியாக த்ரிஷா நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதன் முதற்கட்டப் படப்பிடிப்பை ஈ.சி.ஆர். மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தி முடித்தார்கள். இந்நிலையில் தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஆரம்பித்துள்ளது. இதனையும் சென்னையிலேயே நடத்தி வருகிறார்கள்.

முதற்கட்டப் படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சிகளை படமாக்கிய படக்குழு இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் விவேக், அஜித் சம்பந்தபட்ட காட்சிகளை படமாக்கி வருகிறது. இப்படத்திற்கு இயக்குனர் கௌதம் மேனன் ’சத்யதேவ்’ என்று பெயர் வைத்திருப்பாக சொல்லப்படுகிறது.

SHARE