இரண்டு காலில் அதிவேகமாக ஓடி கின்னஸ் சாதனை புரிந்த நாய்க்குட்டி

162
அமெரிக்காவில் நாய் ஒன்று 2 கால்களில் அதிவேகமாக ஓடி இதற்கு முன்னர் அதிவேக ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை புரிந்த மற்றொரு நாயின் சாதனையை முறியடித்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

கோன் ஜோ என்று அழைக்கப்படும் பாப்பிலா, ஜேக் ரசல், சிகுவாகுவா என்று மூன்று இனத்தின் கலப்பில் பிறந்த அந்த நாய் 5 மீட்டர் தூரத்தை வெறும் 2.76 நொடிகளில் கடந்து புதிய கின்னஸ் உலக சாதனை புரிந்துள்ளது. இதற்கு முன்னர் ஜிப் என்று அழைக்கப்படும் பொமேரியான் நாய் ஒன்று 7.76 நொடிகளில் 5 மீட்டர் தூரத்தைக் கடந்ததே உலக சாதனையாக இருந்தது.

முழுதாக ஒரு கிலோ கூட எடை இல்லாத (907 கிராம்) இந்தக் குட்டி நாய் தனது 2 முன்னங்கால்களால் ஓடி இந்த சாதனையைப் புரிந்துள்ளது. ’என்னுடைய நாய்க்குட்டி ரொம்ப ஸ்பெஷலானதாக்கும்’ என்று இதன் உரிமையாளர்கள் பத்திரிக்கைகளுக்கு பேட்டியளிக்க, நாயின் எடையே அதன் சாதனைக்கு காரணம் என்கின்றனர் ரசிகர்கள்

SHARE