இரவு ஷாப்பிங் செய்வதற்காக மக்கள் அதிகளவில் கூடியபோது குண்டுவெடிப்பு! 7 பேர் பலி

17

 

சிரியாவில் இரவில் ஷாப்பிங் செய்வதற்காக மக்கள் அதிகளவில் கூடியபோது குண்டுவெடித்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரமலானை முன்னிட்டு, விரதம் முடித்து விட்டு இரவில் ஷாப்பிங் செய்வதற்காக மக்கள் அதிகளவில் கூடியபோதே காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துள்ளது.

இந்த சம்பவத்தில், 7 பேர் உயிரிழந்தனர். 30 பேர் வரை காயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து மீட்பு குழுவினர், போலீசார் அந்த பகுதிக்கு சென்றனர்.

காயமடைந்தவர்களை மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், இந்த சம்பவத்திற்கு எந்தவொரு அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.

SHARE