தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் கிளர்ச்சியினைக்கொண்டு தமிழ் மக்களுக்கு ஒரு விடிவுக்காலம் பிறக்கும் என்கின்ற நம்பிக்கையோடு மக்கள் அனைவரும் மைத்திரிபாலவிற்கு வாக்களிக்கவேண்டும். தமிழ் மக்களுடைய நிலங்களை பாதுகாப்பதற்கும், நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் குடியேற்றப்படவேண்டும் என்பதற்காகவும், பெண்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்படவேண்டும்.
காணாமற்போனவர்களுக்கு மற்றும் யுத்த காலத்தில் சரணடைந்தவர்களுக்கும் தீர்வு பெறப்படவேண்டும். ஒரு ஜனநாயக ரீதியில் எமது மக்கள் வாழ்வதற்கான நடைமுறைச்சாத்தியமான தீர்வுகள் கிடைக்கப்பெறும் என்று கருத்திற்கொண்டு மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆதரித்து தமிழ் மக்களாகிய நாம் வாக்களிப்போம். அரசாங்கம் தமிழரசுக்கட்சிக்கெதிராகவும், சிறுபான்மையினத்திற்கு எதிராகவும் உண்மைக்கு மாறான விடயங்களை பிரசுரித்து வருகின்றது.
இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்ற அதேவேளை அவரை எதிர்ப்பதற்காகவும், ஆட்சிமாற்றம் வேண்டும் என்பதற்காகவும் வாக்களிக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது. மக்கள் அனைவரும் 08ம் திகதி காலை வாக்கு அளிக்கும் நிலையங்களுக்கு சென்று தங்களுடைய பலத்தை முழுமையாக செல்லுபடியாகும் வகையில் வாக்குகளை அளிக்கும் படியாகவும் கேட்டுக்கொள்கின்றோம் என தினப்புயல் இணையத்தளத்திற்கு தொலைபேசியின் ஊடாக மாவை சேனாதிராஜா அவர்கள் தெரிவித்தார்.