இராணுவ கோப்ரல் தொடர்பில் நாமல் ராஜபக்ச வெளியிட்ட கருத்துக்கள் காரணமாக விசாரணை நடத்தப்பட உள்ளது.

329
304
ஜனாதிபதி பங்கேற்ற கூட்டத்தில் இராணுவ கோப்ரல் ஒருவர் ஆயுதமொன்றுடன் பங்கேற்றமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

ஹம்பாந்தோட்டை ஹங்கொனுகொலபெலஸ்ஸவில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அருகில் கைத்துப்பாக்கி ஒன்றுடன் இராணுவ கோப்ரல் கூட்டத்திற்கு சென்றிருந்த வேளை, குறித்த இராணுவ கோப்ரலை பொலிஸார்  கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.

குறித்த இராணுவ கோப்ரலை 12ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்த இராணுவ கோப்ரல் தொடர்பில் நாமல் ராஜபக்ச வெளியிட்ட கருத்துக்கள் காரணமாக விசாரணை நடத்தப்பட உள்ளது.

இராணுவக் கோப்ரல் தண்ணீர் போத்தல் ஒன்றையே வைத்திருந்தார் எனவும், கைத்துப்பாக்கி எதனையும் எடுத்துச் செல்லவில்லை எனவும் நாமல் தெரிவித்துள்ளார்.

கைத்துப்பாக்கியுடன் சந்தேகத்திற்கு இடமான முறையில் கூட்டத்தில் சஞ்சரித்த இராணுவ கோப்ரலை ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் விசாரணை செய்யாது விடுவித்திருந்தனர்.

இவ்வாறு எவ்வித விசாரணையும் செய்யாது விடுவிக்கப்பட்டமையின் பின்னணியில் நாமல் ராஜபக்சவிற்கு தொடர்பு உண்டா என்பது குறித்தும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்ய உள்ளனர்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ கோப்ரல், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE