இராணுவ வெற்றிகளை முன்வைத்து நடத்தப்படும் வெற்று அரசியலின் சிங்களத் தந்தை மகிந்த ராஜபக்ச. இராணுவ வெற்றிகளை மட்டுமே வைத்துக்கொண்டு பத்து வருடங்கள் ராஜபக்ச குடும்பம் முழு இலங்கையையும் சூறையாடியது.

361

 

இராணுவ வெற்றிகளை முன்வைத்து நடத்தப்படும் வெற்று அரசியலின் சிங்களத் தந்தை மகிந்த ராஜபக்ச. இராணுவ வெற்றிகளை மட்டுமே வைத்துக்கொண்டு பத்து வருடங்கள் ராஜபக்ச குடும்பம் முழு இலங்கையையும் சூறையாடியது. இதற்கெல்லாம் துணை சென்ற உலகின் மக்கள் விரோத அதிகார வர்க்கம் இலங்கையில் மற்றொரு மாற்றத்தைக் கொண்டுவந்தது.

idp-tamils img_1262584908_17

மைத்திரிபால சிரிசேன என்ற கத்தரித் தோட்டத்து வெருளியை ஆட்சியிலமர்த்தியது. இவரின் பின்னால் ஒளிந்திருக்கும் அதிகாரவர்க்கமும் ஏகாதிபத்தியமும் தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்கான கோரிக்கையை முற்றாக அழித்து இலங்கையை உலகக் கொள்ளைக்காரர்களின் தங்குமடமாக மாற்றியுள்ளன

. இவர்களின் மத்தியில் இராணுவ வெற்றிகளை தனது சொந்த அரசியல் வெற்றியாகக் கூறும் மகிந்த ராஜபக்ச போரில் உயிரிழந்த படைவீரர்களுக்கு நினைவு கூர்ந்து விளக்கேற்றுங்கள் என்று கூறியுள்ளார். போரில் உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களை நினைவு கூருவதையே பயங்கரவாதம் எனக் கூறும் மகிந்த ராஜபக்சவிற்கும் முள்ளிவாய்க்கால் பிழைப்பு நடத்தும் அரசியல். முள்ளிவாய்க்காலின் பிரதான கொலையாளி மகிந்த ராஜபக்சவிற்கும் அடையாளங்கள் பிழைப்பு நடத்த அவசியமாகின்றது. தேசியக் கொடியை ஏற்றி படைவீரர்களுக்கு நினைவு கூருங்கள் என்றார்.

அடையாளங்களை வைத்கு அரசியல் ஊனமுற்ற சமூகத்தை சிங்களப் பேரினவாதிகள் மத்தியிலிருந்து உருவாக்க முனைபவர்களுக்கு மகிந்த ராஜபக்ச தந்தை. நேர்மையும், மக்கள் பற்றும், சமூக உணர்வும் கொண்ட எவருக்கும் குறியீடுகளும் அடையாளங்களும் பொருட்டல்ல. அறிவற்ற அரசியல் அனாதைகள் மட்டுமே அடையாளங்களின் அடிமைகள்.

SHARE