இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி

54

 

புலோப்பளை பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தானது இன்று(29-11-2023) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

விபத்து குறித்து மேலும் தெரியவருகையில், பளை நகர பகுதியில் இருந்து புலோப்பளை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் புலோப்பளையில் இருந்து பளை நகரப்பகுதியை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலதிக சிகிச்சை
இந்த விபத்தில் 20 வயதுடைய குணம் கணேசன் என்ற பளையை சேர்ந்த இளைஞனே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான இருவர் பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE