இறுதிக் கட்ட போரின் போது வன்னியில் காணாமல் போன போனவர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படும்-அமெரிக்கா

441

இறுதிக் கட்ட போரின் போது வன்னியில் காணாமல் போன போனவர்கள் தொடர்பில் சர்வதேச  விசாரணை நடத்தப்படும் என அமெரிக்கா திட்டவட்டமாக நம்பிக்கை தெரிவித்துள்ளது. அத்துடன் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடிப்பதனையும் எம்மால் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

 
காணமால் போனவர்கள் தொடர்பான விசாரணைக் குழுவுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் மூவரை சிறிலங்கா ஜனாதிபதி நியமித்துள்ளார். மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்படுவதனை வரவேற்கின்றோம். ஆனால், இந்த விடயத்தில் தமது நாடு சர்வதேச தரத்தில் நம்பகத்தன்மையுடன் கூடிய பக்கச் சார்பற்ற விசாரணைகள் இடம்பெறுமென வேண்டுமென்பதனையே எதிர்பார்ப்பதாக சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
 
தற்போது உள்நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் காணாமல் போனவர்கள் தொடர்பான ஆணைக்குழு முன்னிலையில் தோன்றி சாட்சியமளிக்கும் நபர்கள், படையினரால் பல்வேறு வழிகளில் அச்சுறுத்தப்பட்டு வருதாக எமக்கு அறியக் கிடைத்துள்ளது. அத்துடன் ஊடகவியலாளர்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.சிறுபான்மை சமூகங்கள் மீதான அழுத்தங்கள் நாட்டின் ஜனநாயகத்துக்கு இழுக்கான வரலாற்றையே எழுதி விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

TPN NEWS

SHARE