இறுதிப் போட்டியில் இந்தியாவை சந்திக்கப் போவது யார்?

96

 

ஆசிய கிண்ண 2023 சூப்பர் 4 சுற்றில் இன்று (14) பாகிஸ்தான் இலங்கையை எதிர்கொள்கிறது.

கொழும்பு R.Premadasa மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகிறது.

இன்றைய (14) போட்டியில் வெற்றி பெறும் அணி எதிர்வரும் 17 ஆம் திகதி ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதும்.

இந்தியாவுக்கு எதிரான தோல்விகளுக்குப் பிறகு இரு அணிகளும் இந்த போட்டியில் களமிறங்குகின்றன.

கொழும்பு R.Premadasa மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல Bounce மற்றும் Later Movement கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பாகிஸ்தானும், இலங்கையும் 155 போட்டிகளில் இதுவரை மோதியுள்ளன.

இதில் 94 இல் பாகிஸ்தானும், 58 இல் இலங்கையும் வெற்றி பெற்று உள்ளன. போட்டிகள் No Results ஆகவும், 1 போட்டி சமன் ஆகியிருக்கிறது.

எனவே, இன்றைய போட்டி இரு அணிகளுக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ள அதேவேளை, போட்டி ஏதேனும் ஒரு காரணத்தினால் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தால் சராசரி புள்ளிகளுக்கு அமைய இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE