இறுதிப் போரில் சில ஆயிரம் தமிழர்களே கொல்லப்பட்டதாக தெரிவித்திருந்தார் என்பது இன்றுவரை ஊடக உலகின் பார்வைக்கு வெளிவராத செய்தி

407
mahinda-malcum-ranjith
கர்தினால் மல்கம் ரஞ்சித் இனவாதி! பாப்பரசரிடம் செல்லும் தவறான தகவல்கள்
கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் 2012ல் அமெரிக்காவில் அப்போதைய இராஜாங்கச் செயலாளர் கிலாரி கிளின்டனிடம், இறுதிப் போரில் சில ஆயிரம் தமிழர்களே கொல்லப்பட்டதாக தெரிவித்திருந்தார் என்பது இன்றுவரை ஊடக உலகின் பார்வைக்கு வெளிவராத செய்தி.

இவ்வாறு கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுதர்மா, லங்காசிறி வானொலியில் இந்த வார நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில். ஜனாதிபதி மகிந்தாவுடனான பாப்பரசரின் சந்திப்புக் குறித்து கருத்து வழங்குகையில் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மல்கம் ரஞ்சித் அவர்கள் ஐக்கிய நாடுளவையின் விசாரணைப் பொறிமுறை என்பது இலங்கையின் சுதந்திரத்தில் அல்லது இறையாண்மையில் தலையிடும் ஒன்று எனக் கண்டித்திருந்தார்.

அத்தோடு வடக்குத் தலைவர்கள் தீர்வுக்கு இணங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பாப்பரசர் இலங்கை வருவதற்கான அழைப்பை கார்தினால் மால்கம் ரஞ்சித் அவர்களே இந்த அழைப்பினை அரசின் சார்பாக 2013ம் ஆண்டு ஆரம்பத்தில் விடுத்திருந்ததோடு, பூரண ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றார்.

அதற்கான நன்றியறிதலை ஜனாதிபதி நேரடியாக ஒரு அறிக்கை மூலம் இந்த வருட ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார்.

கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித், இலங்கையின் நிலைமையைக் கத்தோலிக்கத்தை திருச்சபையிடம் தவறாகக் காண்பிக்கின்றார்.

தமிழர்களின் மறைமாவட்ட உண்மைகளை மறைக்கிறார் என்பதோடு, மகிந்த தனது விளம்பரப் பிரச்சாரங்களிற்கு பயன்படுத்தும் ஒரு நிறுவனத்தையே மல்கம் ரஞ்சித் அவர்களும் தனது பாப்பாண்டவராகும் விருப்பிற்கு பயன்படுத்தினார்.

இப்போது மகிந்தாவிற்கு உதவுவதற்காக வத்திக்கானில் ஒரு வாரமாக நின்று மகிந்தாவிற்கு நிறையவே உதவி வருகின்றார் என்பது உட்பட இதுவரை வெளியுலகிற்குத் தெரியாத பல தகவல்களை இன்றைய நிகழ்ச்சியின் ஊடாக தெரிவித்துள்ளார்.

 

SHARE