இறுதி யுத்தத்தினில் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் போனோர் தொடர்பினில் ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணைக்கு முல்லைதீவு நீதிமன்றிற்கு நாம் செல்வதை தடுக்க இராணுவ சிவில் படைகளை கொண்டு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது.

697

இலங்கை அரசும் இப்போது ஒருமித்த இலக்கொன்றினில் பயணிப்பதாக தெரிவித்துள்ளார் வடமாகாணசபை உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் மகளிரணி தலைவியுமான அனந்தி சசிதரன்.என் கணவரை தேடிக்கண்டுபிடித்து தருமாறு கோரியே நான் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்து வழக்காடி வருகின்றேன்.

ananthi_sasitharan_1

அதே நேரம் விடுதலைப்புலிகளிற்கு ஆட்சேர்ப்பு நடந்ததாக கூறி என்னையும் எனது கணவரை தேடியும் அரச புலனாய்வு பிரிவு முல்லைத்தீவினில் அண்மையிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளது.

அவர்களது கேள்விக்கும் பதிலளிக்க எழிலன் கிடைக்கவேண்டியுள்ளது.

அதனால் தான் இலங்கை அரசை போன்றே நானும் படையினரிடம் ஒப்படைத்த எழிலனை மீள என்னிடம் கையளிக்க வலியுறுத்தி போராடிவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தினில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டினில் அண்மையினில் முல்லைதீவினில் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஊர்வலமாக தொடர்பினில் எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

உண்மையினில் முந்திய ஆட்சியிலும் போதும் சரி தற்போதைய புதிய அரசின் கீழும் சரி மாற்றங்கள் ஏதும் நடந்ததாக நான் நம்பவில்லை.

முன்னரும் இறுதி யுத்தத்தினில் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் போனோர் தொடர்பினில் ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணைக்கு முல்லைதீவு நீதிமன்றிற்கு நாம் செல்வதை தடுக்க இராணுவ சிவில் படைகளை கொண்டு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது.

இப்போதும் அவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றது.

நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விடுதலைப்புலிகள் அமைப்பினில் இருந்தது கிடையாது.ஆனால் புலிகள் திறமையான நிர்வாக கட்டமைப்பொன்றை பேணிவந்திருந்தனர்.

அதனை இல்லாதொழித்த வகையினில் இனி இலங்கை அரசே பதிலளிக்கவேண்டியுமுள்ளது.

இந்த அரசிலும் காணாமல் போனோர் தொடர்பினில் தீர்வைப்பெற்றுத்தரப்போவதில்லையென்பது அப்பட்டமாக தெரிவதாகவும் அனந்தி மேலும் தெரிவித்தார்.

SHARE