இலங்கை தொடர்பில் சர்வதேசத்தில் காணப்படும் தவறான நிலைப்பாடுகளை களைய குரல் கொடுக்கப் போவதாக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயார் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட விஜயமாக இலங்கை வந்துள்ள பிரித்தானிய முன்னாள் பிரதமர் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போதே இதனை கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 17 ஆம் திகதி தேர்தலை மிக அமைதியாகவும் நியாயமானதாகவும் நடத்திமை குறித்தும் பிளேயார் ஜனாதிபதிக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டுக்கு சரியான தலைமைத்துவத்தை வழங்கி ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களையும் அவர் பாராட்டியுள்ளார்.
இதனை தவிர, பிளேயார் மன்றத்தின் சர்வதேச வேலைத்திட்டங்களின் போது இலங்கையுடன் இணைந்து செயற்படுவது பற்றியும் பிளேயார், ஜனாதிபதி விளக்கியுள்ளார்.
இலங்கையின் சுற்றுலாத்துறை அடைந்துள்ள முன்னேற்றத்தை பாராட்டியுள்ள பிரித்தானிய முன்னாள் பிரதமர், அதன் முன்னேற்றத்திற்கு வழங்கக் கூடிய அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளார்.