இலங்கைக்கு சுற்றுப்பயணம் பாகிஸ்தான்….

330

 

 பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 5 ஒரு நாள், இரண்டு டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இத்தகவலை இலங்கை கிரிக்கெட் வாரிய அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த தொடருக்கான இடம் மற்றும் நாள் ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இதன்படி பாகிஸ்தான் அணி கொழும்புவில் டெஸ்ட் தொடருக்கு முன் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. அதன்பின் கலேவில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த போட்டி ஜூன் 17-ந்தேதி தொடங்குகிறது. அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொழும்பில் நடைபெற இருக்கிறது.

ஒருநாள் தொடர் தம்புல்லாவில் ஜூலை 11-ந்தேதி தொடங்குகிறது. இரண்டாவது போட்டி பல்லேகலேவிலும், 3-வது மற்றும் 4-வது போட்டி கொழும்பிலும், 5-வது போட்டி ஹம்பன்தோடாவிலும் நடக்கிறது.

இரண்டு டி20 போட்டிகளும் கொழும்பில் நடைபெற இருக்கிறது. முதல் போட்டி ஜூலை 30-ந்தேதியும், இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 1-ந்தேதியும் நடக்கிறது.

டெஸ்ட் தொடர்

ஜூன் 17-21 : முதல் டெஸ்ட்- காலி
ஜூன் 25-29 : 2-வது டெஸ்ட் – கொழும்பு
ஜூலை 3-7 : 3-வது டெஸ்ட்- கொழும்பு

ஒருநாள் தொடர்

ஜூலை 11: முதல் ஒருநாள் போட்டி-  தம்புள்ள
ஜூலை 15: 2-வது ஒருநாள் போட்டி- பல்லேகலே
ஜூலை 19: 3-வது ஒருநாள் போட்டி- கொழும்பு
ஜூலை 22: 4-வது ஒருநாள் போட்டி- கொழும்பு
ஜூலை 26: 5-வது ஒருநாள் போட்டி- அம்பாந்தோட்டை

டி20 தொடர்

ஜூலை 30: முதல் போட்டி- கொழும்பு
ஆகஸ்ட் 1: 2-வது போட்டி- கொழும்பு

SHARE