இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் எம்.ஏகாம்பரம் தலைமையில் இந்த உண்ணாவிரதப் போராட்டம்

135

 

தேசியப்பட்டியல் மூலம் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் கல்முனைத் தொகுதிக்கு நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று நடத்தப்படுகின்றது.

kalmunai unna2015 0821

இந்தப் பேராட்டம் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் முற்பகல் 10 மணிக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் எம்.ஏகாம்பரம் தலைமையில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமானது.

இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றனர். அத்துடன் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

SHARE