இலங்கையின் யுத்தத்தில் உடல் அங்கங்களை இழந்துள்ள பலர் மாற்றுத் திறனாளிகளாக வாழ்க்கையில் பெரும் சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

137
இலங்கையின் யுத்தத்தில் உடல் அங்கங்களை இழந்துள்ள பலர் மாற்றுத் திறனாளிகளாக வாழ்க்கையில் பெரும் சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அவர்களில் வெற்றிச்செல்வியும் ஒருவர். தன்னம்பிக்கையும் முயற்சியும் மிக்கவராகத் திகழ்கின்றார்.

மன்னார் மாவட்டம் அடம்பனைச் சேர்ந்த வெற்றிச்செல்வி இப்போது நாடறிந்த எழுத்தாளர்களில் ஒருவர்.

முன்னாள் போராளியான வெற்றிச்செல்வி 19 வயதில் வெடிவிபத்தொன்றில் வலது கையையும் வலது கண்ணையும் இழந்துள்ளார்.

தனது இடது கையைக் கொண்டு பல்வேறு பணிகளையும் செய்யும் இவர் முன்னர் வலது கைப்பழக்கத்தைக் கொண்டிருந்தவர். கடுமையான பயிற்சியின் மூலம் இடது கையினால் அழகாக எழுதவும் கணணியில் வேகமாகத் தட்டச்சு செய்யவும், மோட்டார் சைக்கிள் ஓடவும் கூடியவராகவும் இருக்கின்றார் அவர்.

புனர்வாழ்வுப் பயிற்சியின் போது தனக்குப் பயிற்சி எதுவும் கிடைக்கவில்லை என்று கூறும் வெற்றிச் செல்வி, அரசாங்கம் தானாக முன்வந்து கொடுத்த கடனுதவியின் மூலம் தன்போன்றவர்கள் வாழ்வாதார முயற்சிகளில் முன்னேறுவதற்குப் பதிலாக கடனாளிகளாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

தனது சுயதொழிலைக் கைவிட்டு தனியார் நிறுவனத்தின் மாதச் சம்பளத்தில் வாழ்ந்து வருவதாகக் கூறும் வெற்றிச்செல்வி, மாணவர்களின் கல்விக்கு உதவுவது, மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்துக்காக உழைப்பது மற்றும் எழுத்துத் துறையில் ஈடுபடுவது போன்றன தனக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் தருவதாக கூறினார்.

SHARE