இலங்கையின் 67 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிப் பகுதியில் நாளை- இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

369

 

இலங்கையின் 67 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிப் பகுதியில் நாளை புதன்கிழமை நடைபெறுகிறன. இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
sampanthan-sumanthiran-300-news

இது குறித்து இன்று இருவரும் சக உறுப்பினர்களிடம் கருத்துப் பரிமாறிக் கொண்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இவர்கள் இருவரும் கலந்துகொள்வது குறித்து கட்சி தரப்பினர் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர் என்றும் தெரியவருகிறது.

இலங்கை சுதந்திரம் பெற்றதாகக் கூறப்படும் 1972ஆம் ஆண்டு தொடக்கம், தமிழ் மக்களுக்கு எந்த விமோசனமும் கிடைக்கவில்லை என்று தெரிவித்து, அந்த நாளை கறுப்பு பட்டியணிந்து துக்க நாளாகக் கடைப்பிடிக்கவே கூட்டமைப்பு வலியுறுத்தி வந்தது என்றும், இதுகுறித்த தீர்மானத்தை தமிழரசுக்கட்சி எடுக்கும்போது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் முக்கிய கர்த்தாவாக இருந்தார் என்றும் அவதானிகள் தெரிவித்தனர்

SHARE