இலங்கையில் அடுத்து நான் எங்கு பயணிப்பது? ரசிகர்களை கேட்கும் அவுஸ்திரேலிய வீரர்

11

 

அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து பேட் கம்மின்ஸ் இலங்கையில் அடுத்து எங்கு பயணிப்பது என ரசிகர்களிடம் கேள்வி கேட்டு ட்வீட் செய்துள்ளார்.

இலங்கையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, இலங்கை அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

கடைசி ஒருநாள் போட்டி 24ஆம் திகதி கொழும்பில் நடக்க உள்ளது. ஒருநாள் தொடர் முடிந்தவுடன் இரண்டு டெஸ்ட்டுகள் கொண்ட தொடரில் இலங்கை-அவுஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ளன.

இந்த நிலையில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் இலங்கையில் உள்ள சுற்றுலா தளங்களில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அவர் இலங்கையின் துணுக்குகள் என குறிப்பிட்டு வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இலங்கையின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் சுற்றுலா இடங்கள் காட்டப்படுகின்றது.

மேலும், நான் அடுத்ததாக இலங்கையில் எந்த இடத்திற்கு நான் பயணிப்பது என கம்மின்ஸ் ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவருக்கு உதவும் வகையில் இலங்கை ரசிகர்கள் திருகோணமலை, யால, வில்பத்து குமண தேசிய பூங்கா, நெடூந்தீவு யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட சுற்றுலாத் தளங்களை பரிந்துரை செய்து வருகின்றனர்.

SHARE