இலங்கையில் தேர்தலை இலக்கு வைத்து றோ உளவுப் பிரிவு நடவடிக்கை!

166
இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்து, இந்திய உளவுப் பிரிவான றோ நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1031px-Cbi_logo.svg

புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் மூலம் இது தெரியவந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விரிவான உளவுப் பணிகளை றோ ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆறு மாதங்களில் சுற்றுலா வீசாக்களின் மூலம் பல்வேறு வழிகளில் இந்திய றோ உளவுப் பிரிவின் 200 பேர், வடக்கு கிழக்கு மற்றும் மத்திய மலையகத்தில் நிலைகொண்டுள்ளனர்.

இந்தியாவிற்கு விரும்பியவாறு இலங்கையில் ஆட்சியை நிர்ணயிக்கும் நோக்கில் றோ உளவுப் பிரிவினர் செயற்பட்டு வருகின்றனர்.

பல்வேறு வேடங்களில் றோ உளவுப் பிரிவினர் இலங்கையில் பல்வேறு வழிகளில் தகவல்களை திரட்டி வருகின்றனர்.

இதேவேளை, ஹிந்தி மொழி பேசக்கூடிய வடக்கு கிழக்கு தமிழ் இளைஞர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஒன்றை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஆரம்பித்துள்ளது.

இவ்வாறு தங்களை பதிவுசெய்து கொள்ள தேவையான மாதிரி விண்ணப்பப்படிவம் ஒன்றையும் இந்திய உயர்ஸ்தானிகராலய இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

ஹிந்தி மொழி பேசக்கூடிய தமிழ் இளைஞர்கள் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் பதிவு செய்து கொள்ள மின்னஞ்சல் மற்றும் தொலைநகல் முகவரிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்திய உயர்ஸ்தானிகராலயம் இவ்வாறான ஓர் திட்டத்தை முதல் தடவையாக இலங்கையில் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது என சிரேஸ்ட புலனாய்வு அதிகாரியொருவர் சுட்டிக்காட்டியுள்ளதாக சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.

SHARE