இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து எதுவும் தெரியாது என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
சுமார் 140 பாகிஸ்தானிய புகலிடக்கோரிக்கையாளர்களை இலங்கை அதிகாரிகள் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியிட்பட்டிருந்தது.
இந்த நிலையில், பாகிஸ்தானிய புகலிடக் கோரிக்கையாளர்களை கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து எதுவும் தெரியாது என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக செயற்பட்டவர்களே இவ்வாறு புகலிடம் கோரியிருக்கலாம் எனவும் அது பற்றி கருத்து வெளியிட முடியாது எனவும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் புகலிடம் கோரிய பாகிஸ்தானியர்களை நாடு கடத்த வேண்டாம் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் உத்தியோகபூர்வமாக இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது