இலங்கையில் போர்க்குற்ற விசாரணைகளுக்கு தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் பிரதமர்களை நியூயோர்க்கில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக எதிர்கொள்ளவுள்ளார். ஐ.நாவின் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் செல்லவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு பொதுநலவாய தலைவர்களின் கூட்டத்துக்கும் தலைமை தாங்கவுள்ளார். இதன்போது மஹிந்தவை கடுமையாக விமர்சித்துவரும் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் ஆகியோரை நேருக்குநேர் எதிர்கொள்வார். ஐ.நா கூட்டத்தொடருக்கு வெளியே இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஹார்ப்பர் கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டை புறக்கணித்ததும், மாநாட்டில் கலந்துகொண்ட டேவிட் கமரூன் இலங்கையை கடுமையாக விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.
tpn news