இலங்கையுடன் மோதல்: சயீத் அஜ்மல் நீக்கம்.. பாகிஸ்தான் டெஸ்ட் அணி அறிவிப்பு

325
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒருநாள், இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதில் முதலாவது டெஸ்ட் போட்டி காலேவில் வருகிற 17ம் திகதி தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டி தொடருக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில் பந்து வீச்சு சர்ச்சையில் சிக்கி மீண்ட நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் நீக்கப்பட்டுள்ளார்.

மேலும், வேகப்பந்து வீச்சாளர்கள் ரஹாத் அலி, சோகைல் கான், துடுப்பாட்ட வீரர் சோகைப் மசூத் ஆகியோரின் காயம் குணமடையாததால் அவர்கள் பெயர்கள் அணியில் இடம் பெறவில்லை.

தொடக்க ஆட்டக்காரர் அகமது ஷேசாத், ஷான் மசூத் ஆகியோர் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள்.

பாகிஸ்தான் அணி:-

மிஸ்பா-உல்-ஹக் (அணித்தலைவர்), முகமது ஹபீஸ், அகமது ஷேசாத், ஷான் மசூத், அசார் அலி, யூனிஸ்கான், ஆசாத் ஷபிக், ஹாரிஸ் சோகைல், சர்ப்ராஸ் அகமது, யாசிர் ஷா, சுல்பிகர் பாபர், வஹாப் ரியாஸ், ஜூனைத்கான், இம்ரான்கான், இஷான் அடில்.

SHARE