இலங்கையை காப்பாற்றுவதில் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் கியூபா கடும் பிரயத்தனம்-சுரேஷ் பிரேமச்சந்திரன்

298

 

இலங்கையை காப்பாற்றுவதில் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் கியூபா கடும் பிரயத்தனம்
Suresh-Premachandran

அமெரிக்காவின் நகல் திட்ட வரைவின் ஆரம்ப திட்ட வரைபின் முதல் நாள் கூட்டம் இன்று இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் லங்காசிறியின் 24செய்திகளோடு இணைத்து கருத்து தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவின் நகல் திட்ட வரைவினை பலவீனப்படுத்துவதற்காக பாகிஸ்தான், சீனா, கியூபா, ரஷ்யா போன்ற நாடுகள் இலங்கையின் இறையாண்மையை பாத்திக்ககக் கூடிய வசனங்கள் பலவற்றை எடுக்க வேண்டும் என்ற கருத்துக்களை பலமுறை வலியுறுத்தினார்கள்.

ஆனால் சுவிஸ், மற்றும் ஐரோப்பிய யூனியன், கனடா போன்ற நாடுகள் கலப்பு முறையான பொறி முறை உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

அமெரிக்காவின் நகல் திட்ட வரைபு வலுவிழந்து போவதற்கான சாத்தியக் கூறுகள் இருந்தாலும் அதனை வலுவிழக்க விடாமல் செய்யும் முயற்சியில் பல பேர் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

SHARE