இலங்கையை வீழ்த்திய இந்தியா

24

இலங்கைக்கு எதிரான மகளிர் யு-19 டி20 உலகக் கிண்ண ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை எளிதாக வீழ்த்திய இந்திய அணி, 2 வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை 122 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.

3 வது ஆட்டத்தில் ஸ்கொட்லாந்தை 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆனால் 4 வது ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. தனது அடுத்த ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொண்டது இந்திய யு-19 மகளிர் அணி.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 59 ஓட்டங்கள் மட்டும் எடுத்தது. பர்ஷவி சோப்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி 7.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 60 ஓட்டங்கள் எடுத்து பெரிய வெற்றியை அடைந்தது. ஷஃபாலி 15 ஓட்டங்களுக்கும் ரிச்சா கோஷ் 4 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தார்கள்.

SHARE