இலங்கை அரசாங்கம் அ மெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுடன் நெருங்கி செல்லும் நோக்குடன் பல உடன்படிக்கைகளை பல மில்லியன் டொலர்கள் செலவில் மேற்கொண்டமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

390

இலங்கை அரசாங்கம் அமெரிக்காவின் எல்எல்சி எனப்படும் லிபட்டி இன்டர்நெசனல் குரூப் என்ற பொதுமக்கள் தொடர்பு நிறுவனத்துடன் புதிய உடன்படிக்கை ஒன்றை செய்துள்ளது.

இதற்காக இலங்கை அரசாங்கம் 760 000 அமெரிக்க டொலர்களை செலுத்த உடன்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்க உறுப்பினர்கள் மற்றும் இலங்கையை அமெரிக்காவுக்குள் பிரசித்தப்படுத்துவதற்காக இந்த உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில் செய்து கொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கையில் மத்திய வங்கியின் உதவி ஆளுநர் பி நந்தலால் வீரசிங்க கையொப்பமிட்டுள்ளார்.

லிபட்டி நிறுவனத்தின் சார்பில் கொன்னி மார்க் என்பவர் கையொப்பமிட்டுள்ளார்.

இந்தநிலையில் குறித்த உடன்படிக்கை ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து 2015 ஜூலை வரையில் நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையின்படி இலங்கை தொடர்பில் சரியான தகவல்கள் அமெரிக்காவுக்கு கிடைக்க செய்யப்படவுள்ளன.

ஏற்கனவே இலங்கை அரசாங்கம் அ மெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுடன் நெருங்கி செல்லும் நோக்குடன் பல உடன்படிக்கைகளை பல மில்லியன் டொலர்கள் செலவில் மேற்கொண்டமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதேவேளை லிபட்டி நிறுவனம் சுமார் 5 நாட்கள் மாத்திரமே இலங்கையில் வந்து தமது ஆய்வுகளை நடத்திய நிலையிலேயே இந்த உடன்படிக்கையை இலங்கை அரசாங்கத்துடன் செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த லிபட்டி நிறுவனம் அமெரிக்க காங்கிரஸ், அமெரிக்க செனட் மற்றும் அமெரிக்க திணைக்களங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மத்தியில் இலங்கை தொடர்பான மதிப்பை மேம்படுத்தும் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.

இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் இலங்கை மத்திய வங்கி லிபட்டி சர்வதேச நிறுவனத்துக்கு ஒவ்வொரு மாத இறுதியிலும் 63 300 டொலர்களை செலுத்த வேண்டியுள்ளது.

 

SHARE