இலங்கை அரசாங்கம் திறந்தநிலை ஜனநாயகத்தை உருவாக்கி வருவதாக அமெரிக்கா மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.

386

 

இலங்கை அரசாங்கம் திறந்தநிலை ஜனநாயகத்தை உருவாக்கி வருவதாக அமெரிக்கா மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.
06-susan-rice-300 susan-rice-as-the-securuty-advisor

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் இதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், இலங்கை,  பர்மா மற்றும் துனீசியா போன்ற நாடுகளின் திறந்த நிலை ஜனநாயகத்துக்காக அமெரிக்கா உதவியளிக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.

இதேவேளை போருக்குப் பின்னரான பொறுப்புக்கூறல் தொடர்பில் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம், சாத்தியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் மாரி ஹாப் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

இதற்கிடையில் வெளியுறவு அமைச்சர் மங்கல சமரவீர எதிர்வரும் வாரத்தில் அமெரிக்கா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE