இலங்கை, இந்திய வீரர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய குரங்கு

165

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் போது மைதானத்தில் புகுந்த குரங்கு ஒன்றால் போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

இவ்விரு அணிக்குகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்றைய 3வது நாள் ஆட்டத்தின் போது சந்திமால், முபாரக் துடுப்பெடுத்தாடும் போது மைதானத்தில் ஒரு கருங்குரங்கு புகுந்தது.

அந்த குரங்கு அங்கும் இங்கும் ஓடி கலாட்டா செய்தது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. குரங்கை மைதானத்தை விட்டு விரட்டிய பின்னர் ஆட்டம் தொடங்கியது.

SHARE