இலங்கை சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து சட்டத்தரணிகள் சங்கம் மக்களுக்கு விளக்கம் :

384

ARTICLES

நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மக்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடு முழுவதிலும் இந்த மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டம் ஒழுங்குப் பிரிவு தலைவர் லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார்.

காவல்துறையினரின் நடவடிக்கைகள் குறித்தும் திருப்தி அடைய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ருஹூனு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது காவல்துறையினர் நடந்து கொண்ட விதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவா தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள் குற்றச் செயல்களில் ஈடுபடும் போது காவல்துறையினர் வெறுமனே வேடிக்கை பார்த்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE