இலங்கை ஜனாதிபதி காலங்களும்! பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகளும்! கற்பழிப்பு என்பது மிகப்பெரிய குற்றம்.

265
கடந்த மாதம் யாழில் மாணவி வித்தியா கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்ட செய்தியை படித்தபோது இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் பலருக்கும் நடுக்கத்தை கொடுத்தது.

கற்பழிப்பு என்பது மிகப்பெரிய குற்றம்.

இந்நிலையில் மாணவி வித்தியா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் இது காதலாலோ , ஆசையினாலோ ஏன் காமத்தினாலோ கூட ஏற்படவில்லை. பெண்களுக்கு எதிராக தங்களின் காட்டுமிராண்டித்தனத்தை காட்டுவதுபோல் அமைந்த ஒரு நிகழ்வு.
Viththiya_Sivaloganathan_109525_200
பொதுவாக அமெரிக்காவில் ஆண்டுக்கு 3 லட்சம் பெண்கள் பாலியல் கொடுமைகள் மற்றும் கற்பழிப்பு ஆகியவற்றை சந்தித்து வருகின்றனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நீண்ட காலமாகவே தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. இதில் முக்கியமானது தங்களுக்கு மிகவும் தெரிந்தவர்களாலேயே அவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது.
ஒருவேளை கற்பழிப்பு, பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் ஆகியவற்றுக்கு ஒருவரின் உடை மற்றும் தோற்றம் தான் காரணம் என்றால் கத்தோலிக்க திருச்சபை ஏன் இத்தனை  ஆண்டுகளாக குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இந்த குற்றங்கள் குறித்த உண்மையை மறைக்கவேண்டும்.
தங்களுக்கு மிகவும் துணையாக இருப்பார்கள் என் நம்புவர்களால் பாலியல் ரீதியாக கொடுமைகளை சந்திப்பது அப்பாவி சிறுவர்களின் தவறா?
அமெரிக்கா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா என எந்த நாடாக இருந்தாலும் சரி  திருச்சபை சேர்ந்தவர்கள் பாலியல் கொடுமைகளில் ஈடுபடும் பாதிரியார்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதோடு சரி. இந்த விசயங்களை மூடி மறைக்கவே  திருச்சபைகளும் வத்திக்கனை சேர்ந்தவர்களும் முயற்சிக்கிறார்கள்.
போப் பிரான்சிஸ் அதிகாரத்துக்கு வருவதுக்கு முன்பு பாலியல் தொடர்பான அதிகார துஷ்பிரயோகங்கள் குறித்து மேற்கு நாடுகளில் வெளிப்படையாக பேசப்பட்டு வந்தது.
ஆனால் அயர்லாந்தில் மத போதகர்களால் சிறுவர்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் குறித்து தகவல்களை உள்ளூர் பொலிசார்கள் மூடிமறைக்க முயன்றுள்ளனர்.
நைஜீரியாவை சேர்ந்த போகோஹரம் தீவிரவாதிகள் மதத்தின் பெயரால் இளம் பெண்களை கடத்தி கற்பழத்து பின்னர் அவர்களை அடிமைகளாக விற்பது எந்த விதத்தில் நியாமாகப்படுகிறது? ஏன்  ஐ.எஸ் வீரர்கள் கூட சன்னி பிரிவை சேராத அரபிய பெண்களை கற்பழித்துக்கொண்டுதானே இருக்கிறார்கள்.
மேற்கூறிய சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் உடலை முழுதும் மூடப்பட்ட உடைகளை தானே அணிந்துள்ளனர். பின்னர் எப்படி உடையை காரணமாக கூறலாம்.
இலங்கை விவகாரத்துடன் மேற்கூறிய சம்பவங்களை ஒப்பிடுவதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது.
கற்பழிப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகளவில் நடைபெற்றாலும் அந்த விவகாரங்கள் வெளியில் தெரிவதும் இல்லை. இதில் குற்றவாளிகளூக்கு தண்டனையும் இல்லை. எனென்றால் இதைப்பற்றி இந்த சமூகம் பேச மறுக்கிறது.
இது தமிழர், சிங்களவர் அல்லது முஸ்லீம்கள் பற்றிய விடயம் அல்ல, கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுபவர்களின் முக்கிய நினைப்பே நாம் தண்டனையில் இருந்து தப்பித்து விடுவோம் என்பது தான்.
வியட்னாம் போரின்போது அமெரிக்க ராணுவம் நடத்திய பாலியல் பலத்கார கொடுமைகள் பாகிஸ்தான் போரின் போது ,   இரண்டாம் உலக யுத்தத்தின் போது ரஷ்யாவில் நடந்தது. அதற்கு பதிலாக ஜேர்மனியில் ரஷ்யா நடத்திய கற்பழிப்பு கொடுமைகள் என    உலகளாவில் ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்த  சம்பவங்களை நாம் மறுக்க முடியாது .
பத்திரிகையாளர் டிபிஎஸ் ஜெயராஜின் போர் தொடர்பான ஆவணத்தில் இலங்கையில் போர் சமயத்தின் போது கற்பழிப்புகளில் ஈடுபட்ட ஏராளமாக ராணுவ வீரர்களுக்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் அதிர்ச்சியை அளிக்கவில்லை. மாறாக இது குறித்து யாரும் பேசாமல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று முயற்சிகூட எடுக்கவில்லை என்பதை நினைக்கும்போது  கவலையை தான் தருகிறது.
மேலும் யுத்தங்களுக்கு வாய்ப்பில்லாத நாகரிகத்தில் முன்னேறிய நாடுகளில் கற்பழிப்பு நடப்பதாகவும், அந்த குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எந்த தண்டனையும் வழங்கப்படுவதில்லை என்பதை படிக்கும் போது அதிர்ச்சியாக உள்ளது.
மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களில் குழப்பம் ஏற்படுத்துவதற்காக நீதிமன்றங்களின் மீது கல் எறியப்பட்டுள்ளது என்பதை அறியும்போது கவலையாக உள்ளது. மேலும் கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபட்டவர்கள் ராஜபக்ச அரசின் போது தான் தண்டனையில் இருந்து தப்பி வருவதாக சில அரசியல் தலைவர்கள் கூறிவருகின்றனர்.
ஆனால் இது உண்மையல்ல.
கடந்த 1983ம் ஆண்டின் போது விவேன்னெ கோனிவர்தனே என்ற பெண்மணி போலிசாரால் தவறாக நடத்தப்பட்டார். இதனால் அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் சோசா, பார்னெஸ் ரத்வதே, பெர்சி கொலின் தோம் ஆகியோர்  துணை ஆய்வாளரால் அப்பெண்ணின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் அவருக்கு 10 ஆயிரம் ருபா அபராதம் விதித்தனர்.
ஆனால் இதை அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜெயவர்தனவால் சகித்துகொள்ளமுடியல்லை. எனவே சில நாட்களேலேயே அந்த அபராத தொகையை அரசாங்க பணத்திலிருந்து கட்டினார். அதுமட்டுமல்லாமல் அந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வும் வழங்கினார்.
அடுத்த நாள் கூட்டமாக வந்த சிலர் நீதிபதி பெர்சி கொலின் வீட்டின் மீது கல்லெறிந்தனர். பின்னர் அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்கள் என சில நாட்களில் தெரியவந்தது.
இலங்கையில் இனப்படுகொலை அதிகமானது. அதனைப் பொறுத்துகொள்ளமுடியாமல் விடுதலை புலிகள் அமைப்பு போராடியது. பழி வாங்க வேண்டும் என்று நினைத்த தமிழர்கள் அவர்களிடம் சேர்ந்து போராடினர். அதன் பின்னர் நடந்தது உலகிற்கே தெரியும். ஆனால் இதில் அனைவரும் எதற்கு பாதிக்கப்படவேண்டும்.
கற்பழிப்பு, பாலியல் வன்முறைகள் ஆகியவைகள் பல்கி பெருகுவதற்குள் அதனை தடுத்து நிறுத்த வேண்டும். குறைந்த பட்சம் கட்டுப்படுத்தவாவது வேண்டும்.
எனவே  கற்பழிப்பு குற்றங்கள் தொடர்பான வழக்குகளை வேகமாக விசாரித்து குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கவேண்டும்.  கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான தங்களது கண்ணோட்டத்தை அரசியல்வாதிகள் மாற்றிக்கொள்ளாதவரை  இந்த குற்றங்கள் குறையாது.
பெண்கள் தாங்கள் கற்பழிக்கப்பட்டது தொடர்பாக புகார் அளிப்பதற்கு தயங்குகிறார்கள். இதனால் தங்களது திருமண வாழ்க்கை பாதிப்பட்டுவிடும் என்பது அவர்கள் எண்ணம் . எனவே பாதிக்கப்பட்டவர்கள் கமெரா மூலமாகவே தங்கள் சாட்சியத்தை அளிக்க வழிவகை செய்யவேண்டும்.
மேலும் டிஎன்ஏ பரிசோதனை கருவிகளை அனைத்து மருத்துவமனைகளிலும் விரைவாக கிடைக்க செய்யவேண்டும்.
யாழ்ப்பாண மாணவி வழக்கு முதலில் மெதுவாகவே விசாரிக்கப்பட்டது. எனினும் குற்றவாளிகள் விரைவாக கைது செய்யப்பட்டமைக்கு எனது நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்.
இந்த விவகாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையான நடவடிக்கைகள் எடுப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்.
இலங்கை ஏற்கனவே அதிகமாக வன்முறைகளை பார்த்துவிட்டது. இலங்கையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை.
சந்திரிக்கா குமாரதுங்காவின் ஆட்சியின் போது ஒரளவு திட்டங்கள் தீட்டப்பட்டது.  எனவே மீண்டும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
எனவே குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக தனி நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறியதற்கும், அனைவருமே இலங்கையின் குடிமக்கள் எனவே இந்த வழக்கில் குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கபடுவார்கள் என்று கூறியதுக்கும் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன்.
அனைவருமே சட்டத்துக்கு உட்பட்டவர்கள் என்ற நிலை வர வேண்டும் என்பதே நமது ஆசை.
– பேராசிரியர் மனோ ரத்வத்த-
SHARE