இலங்கை தொடர்பில் அமெரிக்க யோசனைக்கு சீனாவும் ரஸ்யாவும் ஆதரவு?

281
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணைக்கு ரஸ்யாவும் சீனாவும் ஆதரவளிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முன்னைய காலங்களில் இலங்கைக்கு ஆதரவாகவே மனித உரிமைகள் பேரவையில் செயற்பட்டு வந்த சீனாவும் ரஸ்யாவும் அமெரிக்கப் பிரேரணைக்கு எதிராகவே வாக்களித்து வந்தன.

இதன் போது அவை இலங்கையின் மனித உரிமைகள் பிரச்சினை ஒரு உள்நாட்டு பிரச்சினை என்றே கூறிவந்தன.

இந்தநிலையில் இந்தமுறை அமெரிக்காவும் இதனை உள்நாட்டு பிரச்சினை என்ற தோரணையில் முன்னெடுப்பதால் இந்த இரண்டு நாடுகளும் அமெரிக்காவுக்கு ஆதரவாக செயற்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அல்லது வாக்கெடுப்பில் பங்கேற்காது விலகி நிற்கக்கூடும். என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE