இலங்கை நாடாளுமன்றில் குடும்ப அரசியல் தொடரும்

151
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது மூத்த மகன் நாமல் ராஜபக்ச இம் முறை நாடாளுமன்றில் செயற்படவுள்ள பிரபல கதாபாத்திரங்களாகும்.

இதற்கிடையில் ஐக்கிய தேசிய கட்சியின் கீழ் போட்டியிட்ட ராஜித சேனாரத்ன மற்றும் அவரது மகன் சதுர சேனாரத்ன நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். அவர்கள் களுத்துரை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் போட்டியிட்டவர்களாகும்.

மகன், தந்தை போன்று சகோதரர்கள் குழுவொன்றும் 17ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில வெற்றி பெற்று தெரிவாகினார்கள்.

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகிய இருவரும் இம் முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள போதிலும் அவர்கள் இருவரும் அரசியல் எதிர்ப்பாளர்களாகவே போட்டியிட்டனர்.

கம்பஹா மாவட்டத்திலே போட்டியிட்ட அவர்கள் இருவரின் இளைய சகோதரர் முன்னாள் அமைச்சர் ருவண் ரணதுங்க தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச, குருணாகல் உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரராகும்.

அவர்களின் உறவினரான முன்னாள் அமைச்சர் நிரூபமாக ராஜபக்ச ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் நவின் திஸாநாயக்க மற்றும் கண்டி மாவட்டத்தில் தெரிவாகிய மயன்ன திஸாநாயக்க இம் முறை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மேலும் ஒரு சகோரர்களாகும்.

தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகிய கரு ஜயசூரிய, நவின் திஸாநாயக்கவின் மனைவியின் தந்தையாகும்.

கண்டி மாவட்டத்தில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் ஆனந்த அலுத்கமகே உறவுமுறை சகோதரர், ரணதுங்க சகோதரர்கள் அரசியல் ரீதியில் எதிர்பாளர்களாகும்.

ஐக்கிய தேசிய கட்சியினால் அனோமா கமகே தேசிய பட்டில் ஊடாக தெரிவு செய்யப்பட்டமையை தொடர்ந்து தயாகமகே மற்றும் அனோமா கமகே நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள கணவன் மனைவி ஜோடியாகும்.

SHARE