மன்னாரில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான போராட்டம்!!

845

mannar_unna_2 mannar_unna_4

இலங்கை படைகளினது அச்சுறுத்தல்கள் தடைகளினையும் தாண்டி தமிழ் மக்களுக்கான மனித மாண்போடு கூடிய நீதியான தீர்வை நோக்கி என்ற தொனிப்பொருளில் சாத்வீகப் போராட்டம் ஒன்று இன்று காலை முதல் மன்னார் நகரில் ஆரம்பமாகியுள்ளது. மன்னார் பிரஜைகள் குழு, மன்னார் மாவட்ட பொது அமைப்புக்கள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஆகியன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளன.

இப் போராட்டமானது மாந்தை திருக்கேதீஸ்வரம் மனிதப் படுகொலைக்கு பக்கச்சார்பற்ற நீதியான சர்வதேச விசாரணை , இறுதி யுத்தத்தில் காணாமல் போனோரை காண்டுபிடிப்பதற்கு சர்வதேச விசாரணைக்குழு அமைத்தல்,முள்ளி வாய்க்காலில் நடைபெற்றது இன அழிப்புத்தான் என்பதை சர்வதேசம் ஏற்று விசாரணை நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நடாத்தப்படுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தினில் நாடளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை அமைச்சர்களான சத்தியலிங்கம், குருகுலராஜா, டெனீஸ்வரன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் மதகுருமார்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர். காலை 9.30 மணியளவில் ஆரம்பிப்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் மாலை 3 மணிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE