இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் எழுந்த பாலியல் லஞ்சம்! நவீன் திஸாநாயக்கவிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

300
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் எழுந்த பாலியல் லஞ்சம் தொடர்பான விசாரணை அறிக்கை விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிடம் கொடுக்கப்பட்டுள்ளது.கடந்த வருடம் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் பாலியல் லஞ்சம் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.அதாவது அணியில் தெரிவாக வேண்டுமாயின் தெரிவாளர்களுக்கு பாலியல் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனை விசாரிக்க அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே விசாரணை குழுவொன்றை நியமித்தார்.

அதன்படி, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி நிமல் திஸாநாயக்க தலைமையிலான குழு நேற்று அமைச்சரிடம் அது தொடர்பாக அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

SHARE