இலங்கை மீன்பிடி ஏற்றுமதி குறித்த ஐரோப்பிய ஒன்றிய தடை இடைநிறுத்தம்

355
இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு மீன் வகைகளை ஏற்றுமதி செய்வது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த தடை உத்தரவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இத்தடையானது 6 மாதங்களின் பின்னரே அமுல்படுத்தப்படவுள்ளதாக மீன்பிடித்துறை இராஜாங்க அமைச்சர் துலிப் வெதாரச்சி தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் ஐரோப்பாவிற்கு விஜயம் மேற்கொண்ட போது மீன்பிடித்தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், சர்வதேச தர நிர்ணயங்கள் பேணப்படுவதில்லை எனவும், தெரிவித்து ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு எதிராக ஏற்றுமதி தடை விதித்திருந்தது.

இவ்வாறு மீன்வகைகள் ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்படுவதினால் நாட்டுக்கு பாரியளவிலான வருமான இழப்பு ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச தர சான்றிதழ்களுக்கமைவாக மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தடையை முழுமையாக நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மீன்பிடித்துறை இராஜாங்க அமைச்சர் துலிப் வெதாரச்சி தெரிவித்துள்ளார்.

SHARE