இளம் கபடி வீராங்கனை ஒருவர் தனது பயிற்சியாளர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார்.
தேசிய அளவில் விளையாடும் இளம் கபடி வீராங்கனையின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
அவர் டெல்லி பொலிசில் அளித்துள்ள புகாரில், கடந்த 9 ஆம் திகதி தனது பயிற்சியாளர் தன்னை ஒரு இடத்திற்கு அழைத்து சென்று சிலருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், மல்யுத்த வீரர் ஒருவரை கைது செய்தனர்.
அவர் அளித்த தகவலின் அடிப்படையில் மேலும் இருவரை கைது செய்தனர். இருவரும் மல்யுத்த வீரர்கள் என்று பொலிசார் தெரிவித்தனர்.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது என்றும் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.