இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. ஆனால், விஜய்க்கு தற்போது தென்னிந்தியா தாண்டி வட இந்தியாவிலும் ரசிகர்கள் கூட்டம் உருவாகி வருகின்றது.
இதை நிரூபிக்கும் பொருட்டு சமீபத்தில் யு-டியூபில் அப்லோட் செய்யப்பட்ட தெறி(ஹிந்தி டப்பிங்) படம் 2 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.
மேலும், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் அதை லைக் செய்துள்ளனர், இவை விஜய் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.